search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்"

    • முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்புவதுடன் முன்பதிவில்லாத பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி காணப்படும்.
    • அதிக பயணிகள் பயணம் செய்த ரெயிலாக நெல்லை சூப்பர் பாஸ்ட் உள்ளதாக தெரிய வருகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே மூலம் இயக்கப்படும் ரெயில்களில் அதிக வருவாய் ஈட்டி தரக்கூ டியது நெல்லை அதிவேக ரெயிலாகும். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களில் நெல்லை எக்ஸ்பிரஸ் முதலிடத்தில் உள்ளது.

    எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் இயக்கப்படும் இந்த ரெயில் எப்போதும் முழு பயணிகள் கொள்ளளவுடன் செல்கிறது.

    முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்புவதுடன் முன்பதிவில்லாத பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி காணப்படும்.

    இதேபோல திருநெல்வேலி, எழும்பூர் இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரசிலும் இடங்கள் நிரம்பி விடுகின்றன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் நெல்லை எக்ஸ்பிரஸ் வருவாய் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 4 மாதத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.23 கோடி கிடைத்ததாக கூறப்படுகிறது. அதிக பயணிகள் பயணம் செய்த ரெயிலாகவும் நெல்லை சூப்பர் பாஸ்ட் உள்ளதாக தெரிய வருகிறது. ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்ட பிறகு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் இந்த ரெயிலில் இடம் கிடைப்பது இல்லை. 3, 4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் மட்டுமே இடங்கள் உறுதியாகிறது. தென்மாவட்ட மக்களின் இதயம் கவர்ந்த ரெயிலாக நெல்லை எக்ஸ்பிரஸ் திகழ்கிறது. வணிக ரீதியாகவும் ரெயில்வே துறைக்கு அதிக லாபம் ஈட்டித் தருவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

    ×